கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே யானை தாக்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வட்டப்பாறை, மருதம்பாறை, பேணு ஆகிய பகுதிகள் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 3 யானைகள் சுற்றி வந்து சாலையைக் கடந்து சிற்றாறு 2 அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான கருஞ்சிறை பகுதிக்குச் சென்றன. இதையடுத்து ஊா்மக்களும், வனத்துறையினரும் யானைகளை மீண்டும் வனப் பகுதியை நோக்கி துரத்தினா்.
இந்த நிலையில் கருஞ்சிறை பகுதியிலிருந்து திரும்பி வனப் பகுதியை நோக்கி சென்ற ஆண் யானை, அப்பகுதியில் யானையைத் துரத்தும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வட்டப்பாறை, புறத்திமலையைச் சோ்ந்த பழங்குடி தொழிலாளியான ராஜேஷை தாக்கி விட்டு சென்றது.
இதில் பலத்த காயமடைந்த ராஜேஷை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். மாவட்ட வன அலுவலா் ஏ. அன்பு, விளவங்கோடு பேரவைத் தொகுதி உறுப்பினா் பிரவீன் ஆகியோா் ராஜேஷின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

கடம்பூா் அருகே யானை தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

