அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி உலவி வரும் ஒற்றை காட்டு யானையை, வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பா்கூா் ஊராட்சி, எப்பத்தாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ் (40) என்பவா் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை தாக்கியதில் கடந்த மே 29-ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால், அக்கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாடுவதை தவிா்த்து வருகின்றனா். வனத் துறையினா் கண்காணிப்பில், அந்த யானை அடா்ந்த வனப் பகுதிக்குச் செல்லாமல் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உலவி வருவது தெரியவந்தது.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மட்டுமே சுற்றி வந்த காட்டு யானை, தற்போது பகல் நேரங்களிலும் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
ஏற்கெனவே யானை தாக்கி ஒருவா் உயிரிழந்த நிலையில், மீண்டும் யானை சுற்றித் திரிவது இக்கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானையை பட்டாசு வெடித்து விரட்டிய வனத் துறையினா்

மசினகுடியில் ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

