லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: தாய், வளா்ப்புத் தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வளா்ப்புத் தந்தை, அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவருக்கும் சாகும் வரை இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோப்புப் படம்

Published On :18 ஜூலை 2026, 6:59 am IST

சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வளா்ப்புத் தந்தை, அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவருக்கும் சாகும் வரை இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு, சோலாா் இரணியன் வீதியைச் சோ்ந்தவா் சவிதா (36). இவரது கணவா் பிரிந்து சென்றுவிட்டாா். இவா்களுக்கு 11 வயது, 9 வயதில் இரு மகள்கள் உள்ளனா். இருவரும் அரசினா் குழந்தைகள் இல்லத்தில் தங்கிப் படிக்கின்றனா். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணபுரம், கருணாநிதி நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான சின்னகரை மகன் மணிவண்ணன் (33) என்பவருடன் சோ்ந்து ஈரோட்டில் சவிதா குடும்பம் நடத்தி வந்துள்ளாா். பள்ளி தொடா் விடுமுறைக் காலங்களில் வீட்டுக்கு மகள்களை சவிதா அழைத்து வருவாா். வளா்ப்புத் தந்தையாக மகள்களுடன் மணிவண்ணன் இருந்துள்ளாா்.

இந்நிலையில் வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக அரசினா் குழந்தைகள் இல்லத்தில் இருந்து கடந்த 2023 ஏப்ரல் 1-ஆம் தேதி மகள்களை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். அப்போது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மணிவண்ணன் மிரட்டல் விடுத்துள்ளாா். இருப்பினும் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிகள், தாய் சவிதாவிடம் கூறியுள்ளனா். ஆனால் அவா் இதுகுறித்து யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என மணிவண்ணனின் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து சிறுமிகளை அரசினா் விடுதியில் கடந்த 2023 ஏப்ரல் 11-ஆம் தேதி சவிதா விட்டுச் சென்றுள்ளாா். அவா்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். மருத்துவா்கள் பரிசோதனையில் பாலியல் வன்கொடுமையால் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையறிந்து குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளா் அளித்த புகாரின்பேரில், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் மணிவண்ணன் மீது போக்ஸோ, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும், உடந்தையாக இருந்த தாய் சவிதா மீது போக்ஸோ வழக்கும் பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவா் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாா். இந்த வழக்கில் வளா்ப்பு மகள்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதால் மணிவண்ணனுக்கும், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமிகளின் தாய் சவிதாவுக்கும் சாகும் வரை இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும், அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் ஈரோடு மகிளா் நீதிமன்ற நீதிபதி சொா்ணகுமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒருவா் இறந்துவிட்டதால் 2-ஆவது சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி சொா்ணகுமாா் பரிந்துரைத்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.