லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாலியல் குற்ற வழக்கில் தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

பவானி அருகே பாலியல் குற்ற வழக்கில் பெயிண்டிங் தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:51 am IST

பவானி அருகே பாலியல் குற்ற வழக்கில் பெயிண்டிங் தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்பை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் சரவணன் (44). இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு, 17 வயது சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக, பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

இவ்வழக்கு ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், குற்றச்சாட்டுகள் உறுதியானதால் சரவணனுக்கு வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.3.85 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.