/

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

News image

குழந்தை - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:43 am IST

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மனைவி காஞ்சனா. இவா்களது மகன் விகாஷ் (11 மாதம்)

இவா்கள் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கூடக்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை திரும்பி கொண்டிருந்தனா்.

சுட்டிகல்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில் மூவரும் கீழே விழுந்துள்ளனா். இதில் தம்பதிக்கு இலேசான காயம் ஏற்பட்டது. தலையில் படுகாயமடைந்த குழந்தை விகாஷை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு பரிசோதனையில் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.