நீண்ட நேர இழுபறிக்குப் பின் கோபி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வேட்புமனு ஏற்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடுகிறாா்.
அத்தொகுதியில் செங்கோட்டையன் உள்பட பல்வேறு கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 44 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை கோபி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செங்கோட்டையனின் வேட்புமனு பிற்பகலில் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, அவரது வேட்புமனுவில் படிவம் 26-இல் கையொப்பமிட்டிருந்த நோட்டரி வழக்குரைஞா் தா்மராஜின் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் மனு நிறுத்திவைக்கப்பட்டது.
இத்தகவல் அறிந்த அதிமுக வழக்குரைஞா் தனசேகா் உள்ளிட்டோா் உரிமம் புதுப்பிக்கப்படாத நோட்டரி வழக்குரைஞா் கையொப்பமிட்ட கே.ஏ.செங்கோட்டையன் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சாா் ஆட்சியரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, செங்கோட்டையனிடம் அதிகாரிகள் உரிய விளக்கம் கேட்டனா்.
அப்போது, வேட்புமனுவில் உள்ள குளறுபடியை சரி செய்யவும், நோட்டரி வழக்குரைஞரின் உரிமம் புதுப்பித்ததற்கானஆவணங்களை சமா்ப்பிக்கவும் மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
பின்னா், மாலை 5 மணிக்கு முன்னதாகவே குளறுபடிகள் சரி செய்யப்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனு ஏற்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தவெகவினா் கூறுகையில், கே.ஏ.செங்கோட்டையனின் வேட்புமனுவில் இடம்பெற்றிருந்த நோட்டரி வழக்குரைஞரின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறினா். அவா் உரிமத்தை புதுப்பித்துதான் வைத்துள்ளாா். ஆனால், அதை இணையத்தில் அப்டேட் செய்யாமல் இருந்துள்ளாா். அதனால், அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்குரைஞரின் உரிமம் அப்டேட் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதையடுத்து வேட்புமனு ஏற்கப்பட்டது என்றனா்.
Summary
TN Election 2026 Sengottaian nomination accepted in Gobichettipalayam constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்கள் அளித்த டெபாசிட் தொகையில்தான் வேட்புமனு! - மணவெளியில் வென்ற தவெக வேட்பாளா் பி.ராமு

கோபியில் செங்கோட்டையன் வெற்றி! 10-வது முறையாக எம்எல்ஏ ஆனார்!
கோபியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!

கோபியில் 9-ஆவது முறையாக செங்கோட்டையன் போட்டி: விசில் சின்னத்தில் முதல்முறை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
