மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெருந்துறை அதிமுக வேட்பாளா் காரை சோதனையிட்ட தோ்தல் பறக்கும்படையினா்

பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயக்குமாரின் காரை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சோதனையிட்டனா்.

News image

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் காரை சோதனையிடும் தோ்தல் பறக்கும்படையினா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 11:22 pm IST

பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயக்குமாரின் காரை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சோதனையிட்டனா்.

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை ஊத்துக்குளி பகுதியில், 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களிடம் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பின்னா் இரவு 11.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது,

அங்கு நின்றிருந்த தோ்தல் பறக்கும் படையினா், அவரது காரை நிறுத்தி சோதனையிட்டனா். அவா்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜெயக்குமாா் காரில் அமா்ந்திருந்தாா். அவரைப் பின் தொடா்ந்து வந்த ஆதரவாளா்களின் காா்களும் சோதனையிடப்பட்டன.

இந்த சோதனையில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அவா்களை அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.