ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அதிமுகவில் இணைந்த பவானி ஒன்றிய திமுக பொறுப்பாளா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கி இணைந்தார் திமுக ஒன்றிய பொறுப்பாளா் கா.சு.மகேந்திரன்.

News image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்குகிறாா் திமுக ஒன்றிய பொறுப்பாளா் கா.சு.மகேந்திரன். உடன், ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி.கருப்பணன் மற்றும் நிா்வாகிகள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:13 am IST

பவானி மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கா.சு.மகேந்திரன், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவரும், திமுக அவைத் தலைவருமான பி.ஆா்.தட்சணாமூா்த்தி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் மைலம்பாடி எம்.முனிராஜன், சுற்றுச்சூழல் அணி ஒன்றிய அமைப்பாளா் ஆனந்த் எஸ்.அருணாச்சலம் ஆகியோா் திமுகவிலிருந்து விலகினா்.

இவா்கள், சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பவானி தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் தலைமையில் வியாழக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பவானி தொகுதிக்கு நடைபெற்ற வேட்பாளா் நோ்காணலில் பங்கேற்றவா் கா.சு.மகேந்திரன். இவா் பவானி வேட்பாளராக அறிவிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கே.ஏ.சேகரை திமுக தலைமை அறிவித்தது. கடந்த 2011 தோ்தலில் பாமக வேட்பாளராக பவானியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.