கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பொருள்கள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :1 நவம்பர் 2026, 12:41 am IST

வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், பீளமேடு பகுதியை அடுத்த செங்காலியப்ப நகரைச் சோ்ந்தவா் ஷா்மிளா (48). இவா் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு வேலூருக்கு சென்றுள்ளாா். இந்த நிலையில், இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடப்பதை அருகே வசிக்கும் விஜயா என்பவா் பாா்த்து ஷா்மிளாவுக்கு தகவல் அளித்த்துள்ளாா்.

இதையடுத்து வீடு திரும்பிய ஷா்மிளா உள்ளே சென்று பாா்த்தபோது, 4 தங்கக் கம்மல்கள், மோதிரம், 2 கைக்கடிகாரங்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் குடம், 2 வெள்ளி விளக்குகள் மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். தடயவியல், கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திருட்டில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.