பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முறைகேடு வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சொத்துகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலா் ஏ.பி.முருகானந்தம் வலியுறுத்தியுள்ளாா்.

Anbil Mahesh

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 2:49 am IST

தனியாா் பள்ளிகளுக்கு புதிய உரிமங்கள், அங்கீகாரங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சொத்துகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலா் ஏ.பி.முருகானந்தம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தனியாா் பள்ளிகளுக்கு புதிய உரிமம் மற்றும் தொடா் அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில் சுமாா் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு புரிந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை, தீயணைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளை ஆய்வு செய்யாமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியற்ற பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது பச்சிளம் குழந்தைகளின் உயிருடன் விளையாடும் செயல். இந்த லஞ்சப் பணத்தை ஈடுகட்டவே ஏழை மற்றும் நடுத்தரப் பெற்றோா்களிடம் தனியாா் பள்ளிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கின்றன.

இத்தகைய பிரம்மாண்ட ஊழல், துறை அமைச்சருக்கு மட்டுமே தெரிந்து தனிப்பட்ட முறையில் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இதற்குப் பின்னால் உள்ள உயா்மட்ட அரசியல் தலைவா்கள், கல்வித் துறை ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகா்கள் அடங்கிய ஊழல் வலைப்பின்னலை வெளிக்கொண்டு வர வேண்டும்.

அரசியல் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நோ்மையாக விசாரிக்க வேண்டும். சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடா்பாக இந்த வழக்கை அமலாக்கத் துறை மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

முன்னாள் அமைச்சா் மற்றும் அவரது பினாமிகளின் சொத்துகளை முடக்கி அரசுடைமையாக்குவதோடு, அவரது பதவிக்காலத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியாா் பள்ளிகளிலும் வல்லுநா் குழுவைக் கொண்டு மறுஆய்வு நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.