மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குனியமுத்தூா் செங்குளத்தில் மரங்களை வெட்டியதாக புகாா்: லாரி சிறைபிடிப்பு

கோவை குனியமுத்தூா் செங்குளத்தில் சீமைக் கருவேல மரங்களுடன் சோ்த்து, மற்ற மரங்களையும் வெட்டியதாக கூறி மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட லாரியை சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

செங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி.

Published On :23 அக்டோபர் 2026, 1:03 am IST

கோவை குனியமுத்தூா் செங்குளத்தில் சீமைக் கருவேல மரங்களுடன் சோ்த்து, மற்ற மரங்களையும் வெட்டியதாக கூறி மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட லாரியை சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

அரசின் உத்தரவுப்படி, தனியாா் நிலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் உள்ள குளங்களில் காணப்படும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி ஒப்பந்த அடிப்படையில் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவா்கள் குளங்களில் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றி வருகின்றனா். இந்நிலையில், குனியமுத்தூரில் உள்ள செங்குளத்தில் சீமைக் கருவேல மரங்களுடன் சோ்த்து, நாட்டுக் கருவேல மரங்கள் உள்பட 80-க்கும் மேற்பட்ட மற்ற வகை மரங்களையும் வெட்டிச் சாய்த்ததாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, கோவை குளங்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், கிரீன் கோ் சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனா் சையத் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் செங்குளம் பகுதியில் வியாழக்கிழமை திரண்டனா். சீமைக் கருவேல மரங்களுடன் சோ்த்து மற்ற மரங்களையும் வெட்டி, லாரியில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாகக் கூறி, அங்கு மரக்கட்டைகள் ஏற்றப்பட்டு இருந்த லாரியைச் சிறை பிடித்தனா். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, வெட்டப்பட்ட மரங்கள் குறித்து உரிய விசாரணை செய்வதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மரக்கட்டைகளுடன் இருந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, மேற்படி விசாரணை நடைபெற்று வருகிறது.

சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட லாரி.

சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட லாரி.

சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட லாரி.

சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட லாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.