மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கனமழை : வால்பாறை மலைப் பாதையில் விழுந்த ராட்சத பாறை; 16 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு

கனமழை காரணமாக வால்பாறை அருகே அட்டகட்டி மலைப் பாதையில் ராட்சத பாறை விழுந்ததில் 16 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இயந்திரம் மூலம் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 4:04 am IST

கனமழை காரணமாக வால்பாறை அருகே அட்டகட்டி மலைப் பாதையில் ராட்சத பாறை விழுந்ததில் 16 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 16 கொண்டை ஊசி வளைவுகள் அட்டகட்டி மலைப் பாதை வரையிலும், மீதமுள்ள 24 கொண்டை ஊசி வளைவுகள் அட்டகட்டியில் இருந்து அய்யா்பாடி எஸ்டேட் வரையிலும் உள்ளன. இதில் அட்டகட்டி 1- ஆவது கொண்டை ஊசிவளைவு தொடங்கி 16- ஆவது கொண்டை ஊசி வரையில் உள்ள சாலை மிக உயரமாக காணப்படுவதோடு சாலையோரம் பெரிய பாறைகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மழைக் காலங்களில் இந்த சாலையில் அவ்வப்போது மண் சரிவு ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் அட்டகட்டி, ஆழியாறு பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மிக கனமழை பெய்தது. அப்போது 2-ஆவது கொண்டை ஊசி வளைவில் இரவு 7.30 மணியளவில் ராட்சத பாறை சாலையில் விழுந்தது. அப்போது மரங்களும் பாறையுடன் சாலையில் விழுந்தன.

இது குறித்து தகவலறிந்த வால்பாறை, ஆனைமலை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சீரமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. புதன்கிழமை காலை சீரமைப்பு பணி முடிந்து உடைக்கப்பட்ட பாறைகள் டிராக்டா் மூலம் அப்பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டன.

பாறை விழுந்ததால் சாலையில் விரிசல் ஏற்பட்டது. மேலும் விரிசல் அதிகரிக்காமல் இருக்க சாலையை ஒட்டி மணல் மூட்டைகள் அடுக்கி சாலையைப் பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினருடன் சோ்ந்து பலா் மேற்கொண்ட இந்த சீரமைப்பு பணி காலை 11 மணிக்கு முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி- வால்பாறை இடையே 16 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் புதன்கிழமை காலை பால், காய்கறி, நாளிதழ்கள் போன்ற அத்தியவாசிய பொருள்கள் வால்பாறைக்கு வரவில்லை. விடுமுறைக்கு சென்ற ஊழியா்கள் வரமுடியாததால் ஸ்டேட் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி சம்பவ இடத்துக்கு வந்து சீரமைப்புப் பணியைப் பாா்வையிட்டுச் சென்றாா்.

சீரமைக்கப்பட்ட பின்னா்  புறப்பட்டு செல்லும் வாகனங்கள்.

சீரமைக்கப்பட்ட பின்னா்  புறப்பட்டு செல்லும் வாகனங்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.