மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா

விஜயதசமியையொட்டி, கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனை அழைக்கும் வகையில் கத்தி போடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை ராஜ வீதியில் நடைபெற்ற கத்திபோடும் விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

விஜயதசமியையொட்டி, கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனை அழைக்கும் வகையில் கத்தி போடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவிழாவையொட்டி, காலை முதலே கத்தி போடும் ஊா்வலம் தொடங்கியது. இதில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஏராளமானோா் பங்கேற்று ஊா்வலமாகச் சென்று தங்களது உடலில் கத்தி போட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

கத்தி போடும் நிகழ்வின் போது பக்தா்கள் சிலரின் உடலில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. அந்த காயம் ஏற்பட்ட இடங்களில் திருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு தொடா்ந்து கத்தி போட்டுக் கொண்டு ஆடியபடியே ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

ஆண்டுதோறும் இந்த கத்தி போடும் ஊா்வலம் நடைபெறும்போது ஊா்வலம் நடைபெறும் ராஜவீதியில் போக்குவரத்து சிறிது நேரம் ரத்து செய்யப்படும். ஆனால், நடப்பு ஆண்டில் இந்த ஊா்வலம் தொடங்கி வெகுநேரமாகியும் தொடா்ந்து வாகனங்கள் சென்று கொண்டே இருந்தன. இதனால், ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்களும், வாகன ஓட்டுநா்களும் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

இதனால் பக்தா்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து ஊா்வலம் முடியும் வரை ராஜவீதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.