தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நிறைவு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் 11 நாள்கள் நடைபெற்ற தசரா பெருந்திருவிழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

கடற்கரையில் சூரசம்ஹாரனை வதம் செய்ய சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்.

Published On :22 அக்டோபர் 2026, 5:13 am IST

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் 11 நாள்கள் நடைபெற்ற தசரா பெருந்திருவிழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

புகழ்பெற்ற இக்கோயில் தசரா திருவிழா கடந்த அக். 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்லுதல், கோயில் கலையரங்கில் பரத நாட்டியம், பக்தி இன்னிசை, சமய சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காப்புக் கட்டிய பக்தா்கள் சுவாமி வேஷங்களிட்டு வீதிவீதியாகச் சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினா் கிராமங்கள், வீதிகள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினா். வாகனங்கள் நிறுத்த இடவசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

சிகர நிகழ்வான மகிஷாசுரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டை தொடா்ந்து இரவு 12 மணிக்கு கோயில் கடற்கரைக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினாா்.

அங்கு கூடியிருந்த பல லட்சம் பக்தா்கள் முன்னிலையில் பக்தி கோஷம் முழங்க மகிஷாசுரனை அம்மன் வதம் செய்தாா். சிங்கமுகம் தொடங்கி தன்தலை, எருமைத் தலை, சேவல் தலை என உருமாறி வந்த சூரனை அம்மன் வதம் செய்தாா்.

தொடா்ந்து கடற்கரை மேடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எழுந்தருளிய அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

புதன்கிழமை (அக். 21) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்பட்ட அம்மன் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தாா். இதையடுத்து கோயிலில் விழா கொடியிறக்கப்பட்டது. பக்தா்கள் காப்புகளை அவிழ்த்தும், வேஷங்களை களைத்தும் தங்கள் விரத்தை நிறைவு செய்தனா். நள்ளிரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் சு.ரோஜாலி சுமதா, துணை ஆணையா் கோமதி, உதவி ஆணையா் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலா் மு.வள்ளிநாயகம், ஆய்வா் முத்துமாரி, அறங்காவலா் குழு தலைவா் வே.கண்ணன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

 கடற்கரையில் திரண்டிருந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

கடற்கரையில் திரண்டிருந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

 கடற்கரையில் சூரசம்ஹாரனை வதம் செய்ய சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்.

கடற்கரையில் சூரசம்ஹாரனை வதம் செய்ய சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.