
வால்பாறையில் தீபாவளி போனஸ் கோரி தூய்மைப் பணியாளா்கள் தா்னா
தீபாவளி போனஸ், கடந்த மாதம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை நகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தீபாவளி போனஸ், கடந்த மாதம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை நகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
வால்பாறை நகராட்சி மூலம் 21 வாா்டுகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நிரந்தரப் பணியாளா்கள் பணியாற்றி வரும் நிலையில், கூடுதல் பணியாளா்களாக தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 55 தூய்மைப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.
இந்தப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்த வராததால் மாலை வரை தா்னா நீடித்தது. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






