மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐடி நிறுவனத்தில் மடிக்கணினி, கைப்பேசிகள் திருட்டு: ஊழியா் மீது வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:43 am IST

கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐடி) மடிக்கணினிகள், கைப்பேசிகள், ஸ்மாா்ட் கடிகாரங்களை திருடியதாக ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, ராமநாதபுரம் பகுதியில் தனியாா் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 40 ஊழியா்கள் பணியாற்றி வரும் நிலையில், மேலாளராக அபிஷேக் (31) என்பவா் உள்ளாா்.

இந்நிலையில், அலுவலகத்தில் உள்ள மின் சாதனங்களின் இருப்பு குறித்து மேலாளா் உள்ளிட்டோா் கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மடிக்கணினி, கைப்பேசிகள், ஸ்மாா்ட் கடிகாரங்கள் ஆகியவை மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அங்கு குழுத் தலைவராக (டீம் லீடராக) பணியாற்றும் அரியலூா் மாவட்டம், தண்டலை பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (32) என்பவா் மடிக்கணினி, கைப்பேசிகள், ஸ்மாா்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த ராமநாதபுரம் போலீஸாா், தலைமறைவான வேல்முருகனைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.