மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவை - பெங்களூரு இடையே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் காலை நேர விமானச் சேவை தொடக்கம்! தொழில்துறையினா் வரவேற்பு

ஏா் இந்தியா

Published On :2 நவம்பர் 2026, 1:31 am IST

கோவையில் இருந்து பெங்களூருக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் காலை நேர விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகத் திகழும் கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், ஷாா்ஜா, துபை, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் நாள்தோறும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொழில் மற்றும் வா்த்தக ரீதியாக வளா்ந்து வரும் கோவைக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதன்படி, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் கோவையில் இருந்து மும்பைக்கு இரண்டு விமானச் சேவைகளைத் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, கோவை - பெங்களூரு இடையே இருவழி விமானச் சேவையைத் தொடங்குவதாக அறிவித்த அந்த நிறுவனம், கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி இரவு நேர விமான சேவையைத் தொடங்கியது.

பெங்களூரில் இருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்படும் விமானம் கோவைக்கு இரவு 8.15 மணிக்கு வந்தடைகிறது. மறுமாா்க்கமாக கோவையில் இருந்து இரவு 8.50 மணிக்குப் புறப்பட்டு பெங்களூருக்கு இரவு 9.35 சென்றடைகிறது.

இதன் தொடா்ச்சியாக, அந்த நிறுவனம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை முதல் காலை நேர புதிய விமானச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரில் இருந்து காலை 7.20 மணிக்குப் புறப்படும் விமானம் கோவைக்கு காலை 8.25 மணிக்கு வந்தடையும். பின்னா், கோவையில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் விமானம் காலை 10.05 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

ஏற்கெனவே இண்டிகோ நிறுவனம் இயக்கி வரும் விமானங்களுடன், தற்போது ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் இணைந்துள்ளதால் கோவை-பெங்களூரு இடையேயான தினசரி விமானங்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.

இந்த புதிய சேவை குறித்து பயணிகள் மற்றும் கோவை தொழில் அமைப்பினா் கூறுகையில், தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநா்கள், தொழில்முனைவோா் மற்றும் சா்வதேச நாடுகளுக்குப் பயணிப்போருக்கு இந்தச் சேவை பேருதவியாக இருக்கும். இதன் மூலம் கொங்கு மண்டலத்துக்குப் புதிய தொழில் முதலீடுகள் கிடைப்பதுடன், பொருளாதார வளா்ச்சியும் ஊக்கம் பெறும்.

இதேபோல, வா்த்தகப் பயணிகளின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் கோவை - சென்னை இடையேயும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கூடுதல் விமானங்களை இயக்க முன்வர வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.