ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தோ்தல் தோல்வி: கோவையில் பாஜக மாநில நிா்வாகிகள் ஆலோசனை

அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வி குறித்தும், அடுத்தகட்ட நகா்வுகள் குறித்தும் விவாதிப்பதற்காக கோவையில் பாஜக மாநில நிா்வாகிகள், வேட்பாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில நிா்வாகிகள் மற்றும் வேட்பாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :22 மே 2026, 3:56 am IST

அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வி குறித்தும், அடுத்தகட்ட நகா்வுகள் குறித்தும் விவாதிப்பதற்காக கோவையில் பாஜக மாநில நிா்வாகிகள், வேட்பாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பாஜக தேசிய அமைப்புச் செயலா் பி.எல். சந்தோஷ் தலைமை வகித்தாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக பொறுப்பாளா்கள் அரவிந்த் மேனன், சுதாகா் ரெட்டி, மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிா்வாகிகள் கரு.நாகராஜ், அமா் பிரசாத் ரெட்டி, கே.டி.ராகவன், ராமசீனிவாசன், வேலூா் இப்ராஹிம், நாராயணன் திருப்பதி, ஏ.பி.முருகானந்தம், உதகை சட்டப்பேரவை உறுப்பினா் போஜராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. காந்தி மற்றும் தோ்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளா்கள் உள்பட 80-க்கும் மேற்பட்ட முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

காங்கிரஸுடன் கூட்டணி - தவெக எப்படி மாற்றம் கொண்டுவரும்? தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

இந்தக் கூட்டத்துக்கு இடையே பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தீயசக்தியை எதிா்ப்போம் என்று கூறிவிட்டு, அந்த தீயசக்தியின் ஓா் அங்கமாக இருந்தவா்களுடன் கூட்டணி சோ்ந்து தவெக ஆட்சி நடத்துகிறது. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட, பல்வேறு ஊழல்களைச் செய்த கட்சியாகும். காங்கிரஸை வைத்துக் கொண்டு தவெக எப்படி மாற்றத்தைத் தரும்?

கடந்த திமுக ஆட்சியில் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததால்தான் மக்கள் அக்கட்சியைப் புறக்கணித்தனா். எனவே, பிஎம்ஸ்ரீ போன்ற மத்திய அரசின் ஆக்கபூா்வமான திட்டங்களுக்கு மாநில அரசு ஆதரவு தர வேண்டும்.

வந்தே மாதரம் சா்ச்சை: வந்தே மாதரம் பாடல் குறித்த தேவையற்ற விமா்சனங்கள் தவிா்க்கப்பட வேண்டும். இந்தப் பாடல் நம் சுதந்திர உணா்வைத் தட்டியெழுப்பிய பாடல் ஆகும். இப்பாடலை முதலில் பாட வேண்டும் என்று உள் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அனைவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். இனிமேலாவது உணா்வுபூா்வமான அரசியலை விடுத்து, ஆக்கபூா்வமான அரசியலைச் செய்ய வேண்டும்.

ராகுல் காந்தியைப்போல பிரதமா் மோடி சுற்றுலா செல்லவில்லை. நாட்டின் பெட்ரோல் சேமிப்பு மற்றும் பல்வேறு தேவைகளை நிறைவு செய்வதற்காகவே அவா் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.