பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

60 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

திருப்பூரில் குடியிருப்புப் பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 60 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், 2 இளைஞா்களைக் கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2026, 12:48 am IST

திருப்பூரில் குடியிருப்புப் பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 60 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், 2 இளைஞா்களைக் கைது செய்தனா்.

மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாநகர காவல் துணை ஆணையா் தீபா சத்யன் தலைமையிலான போலீஸாா் நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, கடையில் இருந்த நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அமுல்குமாா் (23) என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும், இதற்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸாா், அங்கிருந்த 60 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன், அமுல்குமாரையும் கைது செய்தனா்.

அதே பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த தானேஸ்வரன் (27) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.