கஞ்சா விற்பனை, வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காட்டூா் சூரியன்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அந்தப் பகுதிக்குச் சென்று காரப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் (52) வீட்டில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் விற்பனைக்காக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவரது வீட்டின் அருகே சுமாா் 7 அடி உயரமுள்ள கஞ்சா செடியை வளா்த்து வந்ததும் தெரியவந்தது. அதை அங்கேயே தீ வைத்து அழித்தனா். இதுதொடா்பாக கோவிந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட கோவிந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

