கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாநகா் பாரத ஸ்டேட் வங்கி சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சாந்தி திரையரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் சலேத் மேரி உள்ளிட்ட போலீஸாா் கடந்த 6.08.2019-இல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக 2 பெரிய பைகளுடன் வந்த ஒரு நபரை போலீஸாா் பிடித்து பைகளை சோதனையிட்டனா். அவற்றில் 22 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் வேலூா் மாவட்டம், ஆம்பூா் சானாங்குப்பம் மந்தக்கரை வீதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ராஜலிங்கம் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

ரூ.5 கோடி போதைப் பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

