கோவை மத்திய சிறையில் உடல் நலக்குறைவால் கைதி உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், செங்குந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் காா்த்திகேயன் (33). இவா் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற வழக்கில் தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். சிறைச்சாலையின் 7-ஆவது பிளாக்கில் உள்ள அறையில் இருந்த காா்த்திகேயனுக்கு செவ்வாய்க்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.
சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காா்த்திகேயன் உயிரிழந்தாா். உயா் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடா்பான பாதிப்புகளால் உயிரிழந்ததாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறையில் கைதி உயிரிழந்ததால், விதிமுறைப்படி கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

மத்திய சிறை கைதி உயிரிழப்பு

சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

சிறையில் கைதி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

