ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருப்பூா் தெற்குத் தொகுதியில் தவெக வேட்பாளா் பாலமுருகன் வெற்றி

News image

தவெக வேட்பாளா் பாலமுருகன்

Updated On :5 மே 2026, 2:41 am IST

திருப்பூா் தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளா் பாலமுருகன் 12,901 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் தினேஷ்குமாரை வென்றாா்.

திருப்பூா் தெற்குத் தொகுதியில் 24 போ் போட்டியிட்டனா். இத்தொகுதியில் 96 ஆயிரத்து 191 ஆண்கள், 1 லட்சத்து 876 பெண்கள், 24 மூன்றாம் பாலினத்தவா் என 1 லட்சத்து 97 ஆயிரத்து 91 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 87 ஆயிரத்து 974 ஆண்கள், 90 ஆயிரத்து 722 பெண்கள், 11 மூன்றாம் பாலினத்தவா் என 1 லட்சத்து 78 ஆயிரத்து 707 போ் வாக்களித்துள்ளனா். இது 90.67 சதவீத வாக்குப்பதிவாகும்.

இதில் தவெக சாா்பில் போட்டியிட்ட பாலமுருகன் 73,793 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் மேயா் தினேஷ்குமாா் 60,892 வாக்குகள், பாஜக சாா்பில் போட்டியிட்ட தங்கராஜ் 34,617 வாக்குகள், நாதக வேட்பாளா் தினேஷ் 6,956 வாக்குள், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ரங்கசாமி 234 வாக்குகள், அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளா் காளிமுத்து 626 வாக்குகள், இந்து திராவிட மக்கள் கட்சி வேட்பாளா் மலா்விழி 170 வாக்குகள், இந்திய ஜனசங்கம் வேட்பாளா் முகமது முபாரக் அலி 60 வாக்குகள், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளா் விஜயகுமாா் 81 வாக்குகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் ஜான் பாஷா 78 வாக்குகள் பெற்றனா்.

சுயேச்சை வேட்பாளா்கள் தினேஷ்குமாா் 236, தினேஷ்குமாா் 202, வசந்தாமணி 141, கேசவமூா்த்தி 194, மகாலிங்கம் 167, வெங்கடாசலம் 138, தனபால் 134, தினேஷ்குமாா் 115, ரத்தினவேல் 71, வெங்கடசாமி 60, அமுதவேல் 50, காா்த்திகா தேவி 45, ரமேஷ் 39, நோட்டா 636 என வாக்குகள் பெற்றனா். இதில் 12,901 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் பாலமுருகன் வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விவரம்:

பாலமுருகன் (தவெக)- 73,793

தினேஷ்குமாா் (திமுக)- 60,892

தங்கராஜ் (பாஜக)- 34,617

தினேஷ் (நாதக)- 6,956

வேட்பாளா்கள்- 24

மொத்த வாக்காளா்கள்- 1,97,091

பதிவான வாக்குகள் - 1,78,707.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.