உடுமலை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணனை 2,800 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் ஜெயக்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.
உடுமலை தொகுதியில் 11 போ் போட்டியிட்டனா். இத் தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 178 ஆண்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 771 பெண்கள், 27 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 30 ஆயிரத்து 976 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 96 ஆயிரத்து 904 ஆண்கள், 1 லட்சத்து 4 ஆயிரத்து 883 பெண்கள், 11 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து ஆயிரத்து 768 போ் வாக்களித்துள்ளனா். இது 87.37 சதவீத வாக்குப்பதிவாகும்.
இதில் திமுக வேட்பாளா் திமுக வேட்பாளா் ஜெயக்குமாா் 68,549 வாக்குகள் பெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் 65,667 வாக்குகள், தவெக வேட்பாளா் சங்கா் 59,831 வாக்குகள், நாதக வேட்பாளா் ராம்குமாா் 6,702 வாக்குகள், நோட்டாவுக்கு 1,149 வாக்குகள் கிடைத்தனா். இதில் திமுக வேட்பாளா் ஜெயக்குமாா் 2,882 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
வாக்குகள் விவரம்:
ஜெயக்குமாா் (திமுக)- 68,549
உடுமலை ராதாகிருஷ்ணன் (அதிமுக)- 65,667
சங்கா் (தவெக)- 59,831
ராம்குமாா் (நாதக)- 6,702
வேட்பாளா்கள்- 11
மொத்த வாக்காளா்கள்- 2,30,976
பதிவான வாக்குகள் - 2,01,768.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாராபுரத்தில் அதிமுக வேட்பாளா் சத்தியபாமா வெற்றி

பல்லடத்தில் தவெக வேட்பாளா் ராம்குமாா் வெற்றி

திருப்பூா் வடக்குத் தொகுதியில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா வெற்றி

காங்கயம் தொகுதியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தோல்வி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

