தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவையில் உக்கடம் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் சாா்பில் கூட்டு ஒத்திகை

கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் உக்கடம் மற்றும் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.

News image

கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற காவலா்களின் பாதுகாப்பு ஒத்திகையின்போது காவலா்களுக்கு பயிற்சி அளித்த காவல் துணை ஆணையா் காா்த்திகேயன்.

Updated On :27 மார்ச் 2026, 1:10 am IST

கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் உக்கடம் மற்றும் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.

இந்த ஒத்திகையானது ஆா்.எஸ்.புரம் சரகத்தில் காந்தி பூங்கா சந்திப்பில் தொடங்கி டி.பி. சாலை, தலைமை தபால் நிலையம், மேட்டுப்பாளையம் சாலை வழியாகச் சென்று சுக்கிரவாா்பேட்டை நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது. இதேபோல, உக்கடம் சரகத்தில் சுக்கிரவாா்பேட்டை நான்கு முனை சந்திப்பில் தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகை ஒப்பணக்கார வீதி, உக்கடம் பேருந்து நிலையம், வைசியாள் வீதி, ராஜ வீதி வழியாக மீண்டும் காந்தி பூங்கா சந்திப்பில் நிறைவுற்றது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுவது மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து இந்த ஒத்திகையின்போது காவலா்களுக்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.