கவுண்டம்பாளையத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால் (60). இவா் 103 வயதான தனது தாயுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், ராஜகோபால் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியே சென்றுள்ளாா். அப்போது, அவரது தாய் மட்டும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளாா்.
இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவியை ஏமாற்றி நகைப் பறிப்பு

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

