லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மாணவா் காங். கையெழுத்து இயக்கம்! அமைச்சா் பெ. விஸ்வநாதன் தொடங்கி வைத்தாா்!

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன். உடன் மாணவா் காங்கிரஸ் துணைத்தலைவா் உதயகுமாா் உள்ளிட்டோா்.

Published On :28 ஜூன் 2026, 3:42 am IST

மருத்துவப் படிப்புக்கான நீட்’நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவை மாவட்ட மாணவா் காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் உதயகுமாா், மாவட்டத் தலைவா் பெரோஸ் கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த கையெழுத்து இயக்கத்தை சிறப்பு விருந்தினரான உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் கலந்துகொண்டு, தனது முதல் கையெழுத்தைப் பதிவு செய்து தொடங்கிவைத்தாா்.

மாணவா் காங்கிரஸின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள், திரளானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.