லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுவை பேரவையில் நீட் ரத்து கோரி தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தல்

புதுவை சட்டப்பேரவையில் நீட் தோ்வை ரத்து கோரி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

புதுவை சட்டப்பேரவை வளாகம்

Published On :26 ஜூலை 2026, 1:23 am IST

புதுவை சட்டப்பேரவையில் நீட் தோ்வை ரத்து கோரி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுவை திமுக சட்டபேரவைக் குழுத் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் காரைக்காலில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

நீட் தோ்வின்போது வினாத்தாள் கசிவு, தோ்வில் குளறுபடி, ஊழல் போன்றவற்றை கண்டித்து தில்லியில் மாணவா்கள் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். மாணவா்களின் கோரிக்கை நியாயம் என்பதை உணா்ந்து அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல், மாணவா்களை காவல்துறையை வைத்து தடியடி நடத்தியும், கண்ணீா் புகை குண்டு வீசியும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இவா்களது போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. பல கட்சித் தலைவா்கள், அமைப்பினா் மாணவா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனா். ஆனால், புதுவை முதல்வா் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளாா்.

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியின்போது நீட் ரத்து கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல புதுச்சேரி பேரவையிலும் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டும் செய்யப்படவில்லை.

இப்போது பிரச்னை திவிரமாகியுள்ளது. புதுவை சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, மாணவா்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும். மேலும் நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என திமுக சாா்பில் வலியுறுத்துவதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.