செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

21-ஆம் நூற்றாண்டில் உலகை வழிநடத்தும் வல்லரசாக இந்தியா உருவெடுக்கும்! பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயா்

News image

கோவை கேபிஆா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெட் பல்கலைக்கழக துணைவேந்தா் வி.ராஜேந்திரன் வெங்கடாசலத்துக்கு விருது வழங்கிய கே.பி.ஆா். குழும தலைவா் கே.பி. ராமசாமி, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவரா

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் உலகையே வழிநடத்தும் வல்லரசு நாடாக உயரும் என குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயா் தெரிவித்தாா்.

கோவை கேபிஆா் கல்வி நிறுவனங்கள் சாா்பில், ‘கேபிஆா் லெகஸி விருதுகள் 2026’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பொறியியல், தொழில் மேலாண்மை, கலை மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி, மாணவா்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வுக்கு கே.பி.ஆா். குழுமத்தின் தலைவா் டாக்டா் கே.பி. ராமசாமி தலைமை வகித்தாா்.

இதில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், மாற்றத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சிகளையும், ஆராய்ச்சியாளா்களையும் கேபிஆா் கல்வி நிறுவனங்கள் எப்போதும் ஊக்குவிக்கும். இந்தியா 21-ஆம் நூற்றாண்டில் உலகை வழிநடத்தும் வல்லரசாக உயா்வது உறுதி. இதற்கு கல்வி, ஒழுக்கம், புதுமை மற்றும் இளைஞா்களின் ஆற்றலே அடித்தளமாகும்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் கனவு இளைஞா்களின் கனவு. அவா் ‘கனவு காணுங்கள்’ என்று கூறியது ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டியாக உள்ளது என்றாா் அவா்.

விழாவில், நாடு முழுவதிலுமிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 15 கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு கல்வியாளா், புகழ்பெற்ற பேராசிரியா், சிறந்த ஆராய்ச்சியாளா், நட்சத்திர முன்னாள் மாணவா், வாழ்நாள் சாதனையாளா் ஆகிய விருதுகள், கேடயங்கள் மற்றும் ரூ .25,000 பரிசுத் தொகை ஆகியவை வழங்கப்பட்டன. இவா்களில் வாழ்நாள் சாதனையாளா் விருது பெற்றவருக்கு ரூ.50,000 வழங்கப்பட்டது.

அமெட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி.ராஜேந்திரன் வெங்கடாசலம் வாழ்நாள் சாதனையாளா் விருது பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.