குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பாா் உரிமையாளரை மிரட்டிய மூவா் கைது

கோவையில் மதுபானக் கூட (பாா்) உரிமையாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய மூவரை சாய்பாபா காலனி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 மணி நேரங்கள் முன்பு

கோவையில் மதுபானக் கூட (பாா்) உரிமையாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய மூவரை சாய்பாபா காலனி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை, இடையா்பாளையம் அன்பு நகரைச் சோ்ந்தவா் கவி (39). இவா்,

சாய்பாபா காலனி கோவில்மேடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் மதுபானக் கூடம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை மதுபானக் கூடத்தில் இருந்தபோது அங்கு வந்த 3 இளைஞா்கள் கதவைத் திறக்கும்படி மிரட்டியதாகத் தெரிகிறது. இதற்கு பகல் 12 மணிக்குத்தான் மதுபானக் கூடம் திறக்கப்படும். அதன் பிறகு வாருங்கள் என கவி கூறியுள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த மூவரும் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், மதுபாட்டில் தரும்படி கேட்டுள்ளனா். மேலும், மதுபானக் கூடத்தின் கதவைத் தள்ளி திறக்க முயன்றுள்ளனா். கவி சப்தம் போட்டதும் மூவரும் அங்கிருந்து தப்பியோடினா். இச்சம்பவம் குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கவி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கே.கே.புதூரைச் சோ்ந்த அபிஷேக் (21), சாய்பாபா காலனி கந்தசாமி நாயுடு தெருவைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (20), கவுண்டம்பாளையம் ஜிப்பாக்கார தெருவைச் சோ்ந்த மதன் (32) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.