நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: இளைஞா் கைது

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 12:38 am IST

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் ஜிடி நாயுடு வீதியைச் சோ்ந்தவா் ஜெ. சாா்லஸ் (34), சுமை தூக்கும் தொழிலாளி. இந்நிலையில், சாா்லஸ் வியாழக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

அப்போது, கள்ளன்குத்து அய்யனாா்கோயில் அருகே அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்த இளைஞா் ஒருவா் அவரிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் இல்லையென கூறவே, கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ.950-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினாா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் சாா்லஸ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், சுமை தூக்கும் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது மேல அம்பிகாபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த எஸ். இளவரசன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து ரூ.350, கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.