கோவை சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி பகுதியில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் 1.2 கி.மீ. தொலைவுக்கு புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு தற்போது வரை இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், புதிய மேம்பால கட்டுமானப் பணிகளை அமைச்சா் வி.சம்பத்குமாா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தக் கட்டுமானப் பணிகள் முடியும் என ஒப்பந்தப் புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை 80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. எந்தவிதமான தரக் குறைபாடுகளும் இல்லாமல் இதன் கட்டுமானப் பணிகளை இந்த மாதம் இறுதிக்குள்ளேயே முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாா் உரிமையாளரை மிரட்டிய மூவா் கைது

புதிய திட்டப் பணிகளுக்கு கருத்துரு, செயல் திட்டங்களை வழங்க அமைச்சா் வலியுறுத்தல்

வஉசி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

தமிழகத்தில் வரும் காலங்களிலும் தவெக ஆட்சிதான் தொடரும்! அமைச்சா் வி.சம்பத்குமாா்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

