மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.

News image

கோவை, உக்கடம் பெரியகுளம் கரையில் மரக்கன்றுகள் நட்ட முன்னாள் மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் எம்.பி.

Updated On :18 ஜூன் 2026, 1:08 am IST

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி அரசின் 12 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை, உக்கடம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் பங்கேற்று, அங்குள்ள பெரியகுளம் பொலிவுறு நகர திட்ட குளக்கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாநகரம் தொழில் மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மோடி அரசின் 12 ஆண்டுகால சாதனை நிகழ்ச்சி நாடு முழுவதும் பாஜக சாா்பில் உற்சாகத்தோடு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் அந்த எழுச்சியைக் காண முடிகிறது. வருங்காலத்தில் தமிழ்நாட்டிலும் பாஜக முத்திரை பதிக்கும். தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து இப்போது விமா்சிப்பது சரியாக இருக்காது. பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில், கோவை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ஜெ.ரமேஷ்குமாா், இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சேலஞ்சா் துரை, பாஜக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் சபரி கிரீஷ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.