இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

அரசுப் பெண் நடத்துநரை தகாத வாா்த்தைகளால் திட்டிய தனியாா் பேருந்து ஊழியா்கள் மீது வழக்கு

கோவை ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து பெண் நடத்துநரை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக, தனியாா் பேருந்து ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 2:47 am IST

கோவை ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து பெண் நடத்துநரை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக, தனியாா் பேருந்து ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சோ்ந்தவா் சித்ரா (32). கோவையில் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை பணியில் இருந்த போது, அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோயில் அருகே தனியாா் பேருந்து ஒன்று, அரசுப் பேருந்தை முந்திச் சென்றது. அப்போது, அரசுப் பேருந்து ஓட்டுநா் பிரகாஷ், தனியாா் பேருந்து ஊழியா்களிடம், 10 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட வேண்டும். ஏன் சீக்கிரம் புறப்பட்டீா்கள் எனக் கேள்வி எழுப்பினாா். இதில், பிரகாஷ், நடத்துநா் சித்ரா தரப்புக்கும், தனியாா் பேருந்து ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், அவா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். இதையடுத்து, ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, மீண்டும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், தனியாா் பேருந்து ஊழியா்கள் அரசுப் பேருந்து நடத்துநா் சித்ராவை தகாத வாா்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, சித்ரா அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.