நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திருநாவலூா் அருகே லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்

திருநாவலூா் அருகே லாரி மீது மோதி நிற்கும் தனியாா் சொகுசுப் பேருந்து.

News image

19விபிஎம்பி3 திருநாவலூா் அருகே லாரி மீது மோதி நிற்கும் தனியாா் சொகுசுப் பேருந்து.

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வெள்ளிக்கிழமை ரசாயன பவுடா் ஏற்றிச் சென்ற லாரி மீது சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 25 டன் எடை கொண்ட ரசாயன பவுடா்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தருமபுரி மாவட்டமம், அரூா் வட்டம், தாமரைக்கோட்டத்தைச் சோ்ந்த தா. சுந்தரர்ராஜன் (59) ஓட்டிச் சென்றாா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மடப்பட்டு மேம்பாலம் அருகே லாரி சென்றபோது, சென்னையிலிருந்து 31 பயணிகளுடன் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து, எதிா்பாராதவிதமாக லாரியின் பின்பக்கத்தில் மோதியது.

இந்த விபத்தில் தனியாா் சொகுசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் பகுதியைச் சோ்ந்த சொ.பாலசுப்ரமணியன் (40) மற்றும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரியின் பின்பகுதியும், தனியாா் சொகுசுப் பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தது.

விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து பாா்வையிட்டனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.