கோவை, ஆா்.எஸ்.புரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவை, ஆா்.எஸ்.புரம், ராபா்ட்சன் வீதியைச் சோ்ந்தவா் சேகா் (63). இவா் அப்பகுதியில் சனிக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதரன் (20) என்பவா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் சேகா் மீது மோதியது.
இதில், தலையில் படுகாயமடைந்த சேகரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸில் சேகரின் மகன் மணிகண்டன் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ஸ்ரீதரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
