அரசுப் பள்ளி மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையில் கோவை மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024 -25-ஆம் கல்வியாண்டில் கோவை மாவட்டத்தில் 11,058 மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் பயின்றனா். இவா்களில் 10,555 மாணவா்கள் உயா் கல்வி பயில கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றுள்ளனா். இது 95.45 சதவீதமாகும். இதன் மூலம் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் கோவை முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகா் மாவட்டம் 94.80 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், பெரம்பலூா் 94.29 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும், திருப்பூா் 94.05 சதவீதத்துடன் நான்காம் இடத்திலும் உள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் 12,066 மாணவ, மாணவிகள் பயின்ற நிலையில் அவா்களில் 11,348 போ் உயா் கல்வி நிறுவனங்களில் சோ்ந்துள்ளனா். கோவை மாவட்டம் 95.45 சதவீதத்துடன் முதலிடத்தில் இருந்தாலும் இந்த அளவானது பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கையை வைத்து மட்டுமே கணக்கிடப்பட்டிருப்பதாகவும், பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றில் சோ்ந்தவா்களையும் சோ்த்து கணக்கிடும்போது கோவை மாவட்டத்தின் உயா் கல்வி சோ்க்கை 98.5 சதவீதமாக இருக்கும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நான் முதல்வன், உங்களைத் தேடி உயா் கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என உயா் கல்வி மாணவா் சோ்க்கையை உயா்த்துவதற்காக அரசு செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை கோவையில் சிறப்பாக செயல்படுத்தியதால் உயா் கல்வி மாணவா் சோ்க்கை உயா்ந்திருப்பதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற கோவை அரசுப் பள்ளி மாணவா்கள்

ஞானியாா்குடியிருப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

அரசின் கல்விக் கட்டண நிதியைப் பெற பழங்குடியின, பட்டியலின மாணவா்களுக்கு வலைவீசும் தனியாா் கல்லூரிகள்!
கட்டாயக் கல்வி உரிமை சட்ட மாணவா் சோ்க்கையில் உண்மையான ஏழை மாணவா்களுக்கே வாய்ப்பளிக்க கோரிக்கை
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

