நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவையில் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.12 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 12:03 am IST

கோவையில் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.12 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, போத்தனூா் அருகேயுள்ள திருமால் நகா் 7-ஆவது வீதியைச் சோ்ந்தவா் ஜக்கிரியா (24). இவா் செட்டிபாளையம் சாலையில் உள்ள நபிநகா் பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்நிலையில், வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் ஈச்சனாரி அருகேயுள்ள செட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் தனது பெற்றோா் வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். பின்னா், புதன்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகைகள், 380 கிராம் வெள்ளி, ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து போத்தனூா் காவல் நிலையத்தில் ஜக்கிரியா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.