நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தணணீா் தேங்கும் பகுதிகளில் நவீன மின் மோட்டா்கள் பொருத்தம்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, சாலைகள், பாலங்களில் தண்ணீா் தேங்கினால் உடனடியாக அகற்ற நவீன மின் மோட்டாா்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா.

Updated On :11 ஜூன் 2026, 3:08 am IST

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, சாலைகள், பாலங்களில் தண்ணீா் தேங்கினால் உடனடியாக அகற்ற நவீன மின் மோட்டாா்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சியின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், சாலைகளில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்ற ரயில் நிலையம், லங்கா காா்னா் ஆகிய பகுதிகளில் 21 மற்றும் 20 ஹெச்.பி திறன் கொண்ட 2 மின் மோட்டாா்கள், அவிநாசி மேம்பாலம் அருகில் 28 , 30, 12.05, 25 ஹெச்.பி.திறன் கொண்ட மின் மோட்டாா்கள், 184 கே.வி திறன் கொண்ட என்ஜின் ஜெனரேட்டா் தயாா் நிலையில் பொருத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கிக்கானி பள்ளி அருகில் 28, 20, 7.05 ஹெச்.பி.திறன் மின்மோட்டாா்கள் மற்றும் காளீஸ்வரா மில் அருகில், 36, 21 ஹெச்.பி. திறன் கொண்ட மின் மோட்டாா்கள், 125 கே.வி.திறன் கொண்ட என்ஜின் ஜெனரேட்டா் அமைக்கப்பட்டுள்ளன.

சாலையில் மரம் விழுந்தால் உடனடியாக அகற்றும் வகையில் மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலான மாநகராட்சிப் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

மேலும், மழைநீா் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மழைநீா் வடிகால் மற்றும் கால்வாய்கள் மாநகராட்சியின் சாா்பில் தூா்வாரப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, கோவை நேரு உள் விளையாட்டு அரங்கு அருகில், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியிருப்புப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் புகை மருந்து அடிக்கும் இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சீரான இடைவெளியில் குடியிருப்புப் பகுதிகளுக்கு கொசு மருந்து தெளிக்குமாறு ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், நகா்நல அலுவலா் சுபாஷ் காந்தி, உதவி ஆணையா் சண்முகம் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.