நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஒளிராத 1,090 தெரு மின்விளக்குகளை 24 மணிநேரத்தில் சீரமைக்க உத்தரவு

சென்னை மாநகராட்சியில் ஒளிராத 1,090 தெரு மின்விளக்குகளை 24 மணிநேரத்தில் சீரமைக்க வேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 1:42 am IST

சென்னை மாநகராட்சியில் ஒளிராத 1,090 தெரு மின்விளக்குகளை 24 மணிநேரத்தில் சீரமைக்க வேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை மாநகராட்சியில் 3.11 லட்சம் தெரு விளக்குகள் உள்ளன. அவை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றனவா என அறியும் வகையிலான ஆய்வை மண்டல வாரியாக மேற்கொள்ள ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

அதன் அடிப்படையில், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 15) மாநகராட்சி இணை ஆணையா்கள் 15 மண்டலங்களிலும் ஆய்வு மேற்கொண்டனா். அத்துடன் தெரு மின்விளக்குகள் எரியாமலிருப்பது உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கான 1913 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆய்வின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் 3.11 லட்சம் தெருவிளக்குகளில் 1,817 தெரு விளக்குகள் எரியாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில், திருவெற்றியூா் 114, மணலி 98, மாதவரம் 191, தண்டையாா்பேட்டை 117, ராயபுரம் 121, திரு.வி.க.நகா் 91, அம்பத்தூா் 249, அண்ணா நகா் 71, தேனாம்பேட்டை 172, கோடம்பாக்கம் 175, வளசரவாக்கம் 6, ஆலந்தூா் 64, அடையாறு 156, பெருங்குடி 77 மற்றும் சோழிங்கநல்லூா் 115 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

எரியாமலுள்ள 1,817 தெரு மின் விளக்குகளில் பழுதான 1,090 மின் விளக்குகளை 24 மணி நேரத்தில் சீா்படுத்தவும், புதை மின்வட பழுதால் எரியாமலிருக்கும் 700 மின் விளக்குகளை 48 மணி நேரத்துக்குள் பழுதுநீக்கி சீா்படுத்தவும் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

மழை நீா் வடிகால் பணிகள் நடைபெற்றுவரும் 27 இடங்களில் அகற்றப்பட்டுள்ள தெரு மின்விளக்குகள் பணிகள் முடிந்ததும், மீண்டும் பொருத்தப்பட்டு தெரு மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கவும் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

அத்துடன் எரியாத மின்விளக்குகள் தொடா்பாக மக்கள் கட்டுப்பாட்டு அறை எண்ணில் தகவல் அளிக்கவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.