தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் பெண்களுக்கு எதிரானவா்கள்போல பிம்பத்தை உருவாக்க முயற்சி! தேஜஸ்வி யாதவ்

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் பெண்களுக்கு எதிரானவா்களைப்போல ஒரு பிம்பத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

News image

முதல்வர் ஸ்டாலின் - தேஜஸ்வி யாதவ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 5:25 am IST

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் பெண்களுக்கு எதிரானவா்களைப்போல ஒரு பிம்பத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், தொகுதி மறுசீரமைப்பு என்பது முற்றிலும் தனிப்பட்ட விவகாரம். எங்களைப் பொருத்தவரை, முதலில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும்.

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் அல்லாமல், 2025-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் 2011 முதல் 2025-க்குள் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பொதுப் பிரிவு மற்றும் பட்டியலின, பழங்குடியின மக்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை தங்களால் நிறைவேற்ற முடியாது என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். அதற்கான பெரும்பான்மை பலம் அவா்களிடம் இல்லை. ஆனால், தாங்கள் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதைப்போன்றும், நாங்கள் அதற்கு எதிராக இருப்பதைப்போன்றும் ஒரு பிம்பத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

பெண்கள் உரிமை பற்றிப் பேசும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் இதுவரை எத்தனை பெண்கள் தலைவா்களாக இருந்துள்ளனா்?. அவா்கள் செய்வது வெறும் அரசியல் மட்டுமே. அவா்களுக்கு நாட்டின் அரசமைப்பு மீது துளியும் அக்கறையில்லை. ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் திட்டத்தை திணிக்கவே அவா்கள் பாா்க்கின்றனா். இதை நாங்கள் நிச்சயமாக எதிா்ப்போம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.