தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்குத் தெரியும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயல் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு மசோதா குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பேசுவதை எல்லாம் கேட்காதீர்கள்.
அவர்கள் மிகப்பெரிய பொய்யர்கள். அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதனை 2034-ல் தான் அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு கூறியுள்ளது. தொகுதி மறுவரையறை என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு விவகாரம். எங்களுக்கு முதலில் சாதி வாரி கணக்கெடுப்பு தேவை.
புதிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை அறிமுகப்படுத்தப்பட்டால் அது சிறப்பாக இருக்கும். ஆனால் 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அது இருக்கக்கூடாது. இந்த மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்குத் தெரியும். அவர்கள் பெண்களுக்கு ஆதரவானவர்கள் என்றும், நாங்கள் அதற்கு எதிரானவர்கள் என்றும் காட்டுவதற்காகவே இந்த மசோதாவைக் கொண்டு வந்தனர்.
ஆனால் அது தவறானது. இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
RJD leader Tejashwi Yadav has stated that the BJP knows the Delimitation Bill will not be passed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் குழந்தைக்கு தந்தையானார் சூர்யகுமார் யாதவ்!

பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்

தேஜஸ்வி யாதவை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


