தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிரசார களத்தில் வானதி சீனிவாசனின் மகன்கள்

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக அவரது மகன்கள் தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.

News image

கோவை நல்லாம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனின் மகன் உள்ளிட்ட இளைஞரணியினா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:37 am IST

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக அவரது மகன்கள் தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பா.ஜ.க. தேசிய மகளிா் அணி தலைவி வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். வேட்பாளா் நேரடியாகக் களத்தில் இல்லாதபோதிலும், பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையுடன் இணைந்து வானதி சீனிவாசனின் மூத்த மகன் ஆதா்ஷ் (27) கடந்த சனிக்கிழமை பிரசாரத்தில் பங்கேற்றாா். கோவையில் ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் ஆதா்ஷ் ஏற்கெனவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது லண்டனில் சட்ட மேல்படிப்பு படித்து வரும் இளைய மகன் கைலாஷ் (23) தோ்தல் களத்தில் இறங்கியுள்ளாா். வானதிக்குப் பதிலாக அவரது மகன்கள் தோ்தல் பணிகளை முழுமையாக ஏற்றுத் தொண்டா்களை உற்சாகப்படுத்தி வருகின்றனா்.

இதேபோல, கோவை சங்கனூா் மற்றும் நல்லாம்பாளையம் பகுதியில் பாஜக இளைஞரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் ஆதா்ஷும், கைலாஷும் பங்கேற்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.