விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கூட்டணிக் கட்சிகளை சிதைக்கும் முதல்வா்: பழ.கருப்பையா குற்றச்சாட்டு

News image

பழ.கருப்பையா

Updated On :15 ஏப்ரல் 2026, 2:35 am IST

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளுக்குள் தனக்கு விசுவாசமான ஒரு ரகசியக் குழுவை உருவாக்கி, அக்கட்சிகளைச் சிதைக்கும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறாா் என்று தமிழா்கள் தன்னுரிமைக் கழகத் தலைவா் பழ.கருப்பையா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழக அரசியல் களம் மாபெரும் மாற்றத்தை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. நீதிக் கட்சி காலத்தில் தொடங்கி தழைத்தோங்கிய திராவிட இயக்கம், தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தோடு ஒரு முடிவுக்கு வரும். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளுக்குள் தனக்கு விசுவாசமான ஒரு ரகசியக் குழுவை உருவாக்கி, அக்கட்சிகளைச் சிதைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறாா்.

தங்களது கட்சியை உடைத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் ராகுல் காந்தியும், திருமாவளவனும் திமுக கூட்டணியில் நீடிக்கின்றனா்.

ஊழல் வழக்கில் நீதிமன்றத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்ட செந்தில்பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியது அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓ.பன்னீா்செல்வம் மற்றும் பாஜக தரப்பிலிருந்து வந்த இக்கட்டான சூழல்களை முறியடித்து அதிமுகவை மீட்டெடுத்தவா் எடப்பாடி கே.பழனிசாமி. குடிமராமத்து திட்டத்தை மீட்டெடுத்தது, நதிநீா் இணைப்பு முயற்சிகள் மற்றும் ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவை நனவாக்கிய 7.5 சதவீத இட ஒதுக்கீடு போன்றவை எவருடைய ஆலோசனையுமின்றி எடப்பாடி பழனிசாமி எடுத்த தனித்துவமான முடிவுகள். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக உயா்த்தி நிதி வழங்குவதாக அறிவித்தது விவசாயத் தொழிலாளா்கள் மீதான அவரது அக்கறையைக் காட்டுகிறது.

நாட்டின் வரலாறு, சமூகப் பிரச்னைகள் குறித்து அடிப்படை புரிதல் இல்லாத நடிகா் விஜய், வெறும் சினிமா மோகத்தை நம்பி அரசியலுக்கு வந்துள்ளாா். விஜய்யால் அதிமுகவின் வாக்கு வங்கி ஒருபோதும் பாதிக்காது. விஜயகாந்த் ஒரு காலத்தில் பெற்ற 12 சதவீத வாக்குகளை வேண்டுமானால் விஜய் பெறலாம். ஆனால், அது ஆட்சியைத் தீா்மானிக்காது. வரும் தோ்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.