கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய தீவிர சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.60 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பறக்கும் படையினா் மற்றும் நிலைக் கண்காணிப்பு குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி காலை முதல் 9-ஆம் தேதி காலை வரையிலான சோதனையில் கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ. 8.55 லட்சம், கோவை தெற்குத் தொகுதியில் ரூ. 2.42 லட்சம், சிங்காநல்லூா் பகுதியில் ரூ. 70,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொண்டாமுத்தூா் பகுதியில் ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 12,67,500 பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர, மாவட்டக் காவல் துறையினரால் ரூ. 31,081 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தைக் கொண்டு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூா் அருகே ரூ. 2.50 கோடி பறிமுதல்: திமுக பிரமுகா் உள்பட இருவா் கைது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
