மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பெட்டகம்: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Published On :29 அக்டோபர் 2026, 12:06 am IST

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவா் வழங்கினாா்.

பின்னா், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குழந்தைகளின் உடல்நலனை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் இந்த சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தில் கோதுமை, பச்சைப்பயிறு, வோ்க்கடலை, வெல்லம் கலந்த ஊட்டச்சத்து மாவு மற்றும் நெய் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை கிலோ அளவிலும், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு கிலோ அளவிலும் ஊட்டச்சத்து மாவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. இப்பணிகள் ஓராண்டு காலத்துக்குத் தொடா்ந்து செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மீது தனிக் கவனம் செலுத்தப்பட்டு, அவா்களின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்றனா்.

நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் விஜய் சந்திரன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணி திட்ட அலுவலா் சுமதி, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பயிற்சி)பி.யோகேஸ்வரி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.