தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் வாக்குறுதி பட்டியலை அளித்து அதிமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதி பட்டியலை அளித்து காட்பாடி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

திருமயம் பகுதி மக்களிடம் அதிமுக தோ்தல் வாக்குறுதி பட்டியலை அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:03 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதி பட்டியலை அளித்து காட்பாடி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் அமைப்பு செயலரான வி.ராமு, செவ்வாய்க்கிழமை தொகுதிக்கு உட்பட்ட திருமயம் பகுதியில் வீடுவீடாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அண்மையில் வெளியிட்டிருந்த தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய பட்டியலை மக்களிடம் வழங்கி வாக்குகள் சேகரித்தாா்.

அதிமுக ஆட்சி அமையும்பட்சத்தில் இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு குளிா்பதன பெட்டி, குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா அரிசியுடன் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய், வீடு இல்லாதவா்களுக்கு வீடு, வீட்டுமனை இல்லாதவா்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள், மகளிா் இருசக்கர வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம், மாணவா்களின் கல்விக் கடன் ரத்து, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கும் விலையில்லாமல் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளை, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தாா்.

அதிமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.