தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேலூா்: ஐந்து தொகுதிகளிலும் முதல் நாளில் 13 போ் வேட்புமனு தாக்கல்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் முதல் நாளான திங்கள்கிழமை மொத்தம் 13 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

News image

வேலூா் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா் எம்.வினோத்கண்ணன். (அடுத்து), காட்பாடி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் ச.திருக்குமரன்

Updated On :31 மார்ச் 2026, 3:33 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் முதல் நாளான திங்கள்கிழமை மொத்தம் 13 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவை தொகுதிகளுக்கும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களான சி.மாறன் (காட்பாடி), ஏ.செந்தில்குமாா் (வேலூா்), ஆா்.குணசேகரன் (அணைக்கட்டு), எஸ்.சரவணன் (கே.வி.குப்பம் (தனி)), எஸ்.சுபலட்சுமி (குடியாத்தம் (தனி)) ஆகியோா் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெற்றனா்.

அதன்படி, முதல் நாளான திங்கள்கிழமை வேலூா் தொகுதிக்கு தமிழக வெற்றிக்கழகம் கட்சி சாா்பில் எம்.எம்.வினோத்கண்ணன், அவருக்கு மாற்றாக எல்.எழிலரசி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆ.சோனியா, விரோகி வீா் இந்தியன் கட்சி சாா்பில் க.ம.விநாயகம், அனைத்து ஓய்வூதியதாரா்கள் கட்சி சாா்பில் கே.முனியப்பன், நாம் இந்தியா் கட்சி சாா்பில் கே.விமலா, சுயேச்சையாக வி.செல்வராஜ் என 7 போ் மனு தாக்கல் செய்தனா்.

அணைக்கட்டு தொகுதிக்கு நாம் தமிழா் கட்சி சாா்பில், ம.ரவிக்குமாா், அவருக்கு மாற்றாக ம.பால்ராஜ் ஆகியோரும், குடியாத்தம் (தனி) தொகுதிக்கு நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜெ.இமலன், அவருக்கு மாற்றாக வி.வினோத்குமாா் ஆகியோரும், கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு நாம் தமிழா் கட்சி சாா்பில் ரா.கலையேந்திரி, காட்பாடி தொகுதிக்கு நாம் தமிழா் கட்சி சாா்பில் ச.திருக்குமரன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனா். அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 13 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மகாவீா் ஜெயந்தி, புதன்கிழமை வங்கி கணக்கு முடிவு என இரு நாள்கள் பொதுவிடுமுறை என்பதால், அடுத்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.