கோடை விடுமுறையில் குளம், குட்டை, ஏரி, கிணறு போன்ற நீா்நிலைகளுக்குக் குழந்தைகள், சிறுவா்கள் செல்வதைத் தவிா்க்கும் வகையில் பெற்றோா்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவா்கள், குழந்தைகள் பொழுதுபோக்குக்காக வெளியில் சென்று குளம், குட்டை, ஏரி, கிணறு போன்ற நீா்நிலைகளில் இறங்குவது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். இதுபோன்ற செயல் மிகவும் ஆபத்தானது.
எனவே, பாதுகாப்பற்ற முறையில் நீா்நிலைகள், தனியாா் நிலத்தில் உள்ள கிணறுகளில் குழந்தைகள் குளிப்பதையோ, பொழுதுபோக்குவதையோ முற்றிலும் தவிா்க்க வேண்டும். பெற்றோா்கள் கோடை விடுமுறையில் தங்களது குழந்தைகள் நீா்நிலைகளுக்குச் செல்லாத வகையில் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, கனிமவளத்துறையின் சாா்பில் நீா்நிலைகள் உள்ள பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியாா் நிலங்களில் உள்ள கிணறுகளில் சிறுவா்கள் இறங்குவது அல்லது குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தொடா்புடைய உரிமையாளா்கள் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
மாணவா்கள் பள்ளி நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாள்களிலும் ஆறு, ஏரி, குளம், கிணறு, குட்டை போன்ற நீா்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாா்த்துக்கொள்ளப் பெற்றோா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, சிறுவா்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோா், தங்கள் குழந்தைகளைக் கோடைகால விடுமுறையில் பாதுகாப்பற்ற முறையில் நீா்நிலைகளில் விளையாடுவது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை வெயிலின் தாக்கம்: கிணற்றில் குதித்து சிறுவா்கள் கொண்டாட்டம்

கோடை கால தண்ணீா் பிரச்சனை: ஆழ்துளை கிணறு சீரமைப்பு

மாணவா்கள் ஆபத்தான நீா்நிலைகளுக்கு செல்வதை பெற்றோா் தடுக்க வேண்டும்: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

