/

குடியாத்தத்தில் தலைவா் சிலைகளுக்கு அதிமுக வேட்பாளா் மரியாதை

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் குடியாத்தத்தில் தலைவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image

குடியாத்தத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன்.

Updated On :30 மார்ச் 2026, 2:25 am IST

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் குடியாத்தத்தில் தலைவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமையில் அம்பேத்கா், காமராஜா், பெரியாா், அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் அமுதா சிவப்பிரகாசம், நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.